இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தாலும், மக்கள் மனதில் எப்போதும் டாப் இடத்தில் தான் உள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் சமீபத்தில் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை சீரியல் குழுவினர் வெகு விமரிசையாக கொண்டாடி உள்ளனர்.
இந்த சீரியலில் இயக்குனர் பல மறக்க முடியாத கேரக்டர்களை உருவாக்கி உள்ளார். குறிப்பாக ஆதி குணசேகரன் என்ற அந்த வில்லன் கேரக்டர். முன்னதாக இதில் நடித்த மறைந்த நடிகர் மாரிமுத்து ஆதி குணசேகரனாகவே வாழ்ந்திருந்தார்.
அந்த அளவிற்கு ஆதி குணசேகரன் கேரக்டருக்கு பொருத்தமாக இருந்தார். தற்போது அந்த கேரக்டரில் நடித்து வரும் வேல ராமமூர்த்தியும் அவரின் பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறார்.
இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியல் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து அதன் இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடி உள்ளது. இதுகுறித்து அந்த சீரியலில் நடித்து வரும் நட்சத்திரங்கள் மிகவும் உருக்கமாக சில விஷயங்களை பகிர்ந்துள்ளனர்.
தற்போது இந்த கொண்டாட்ட புகைப்படங்கள் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

