3.5 C
New York
Tuesday, December 23, 2025

Buy now

கணவன், மனைவி நடித்த ‘யுகம்’…இந்தியாவின் முதல் வெர்ட்டிகிள் படம்.

பொதுவாக, தியேட்டரில், டிவியில், லேப் டாப்பில் நாம் படங்களை ஹரிசாண்டல் பார்மெட்டில் பார்ப்போம். ஆனால், ரீல்ஸ் போன்ற வீடியோக்களை செல்போனில் பார்ப்பதால், அதை வெர்ட்டிகிள் பார்மெட்டில் பார்த்து ரசிப்போம். அப்படி வீடியோ பார்ப்பது அதிகரித்து வருகிறது. ரீல்ஸ் ரீச் பல மில்லியன் பார்வைகளை தொடுகிறது. வெளிநாடுகளில் இப்போது வெர்ட்டிகிள் பார்மெட்டில், அதாவது செங்குத்து கோணத்தில் படம் பார்க்கிற பழக்கம் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப டிவிகள் மார்க்கெட்டில் வந்துவிட்டன. உலகம் முழுக்க வெர்டிகிள் பார்மெட்டில் படம் எடுக்க ஒரு கூட்டமும் கிளம்பிவிட்டது. அது தொடர்பான கருத்தரங்களும் நடக்கிறது. அப்படி பல படங்கள் வந்து, அதற்கான திரைப்பட விழாக்களே நடந்து விட்டன.

இந்தியாவில் வெர்ட்டிகிள் பார்மெட்டில் வந்துள்ள முதல் வெப் சீரியஸ் ‘யுகம்’. இந்த படத்தை குழந்தைவேலப்பன் இயக்கி, கதைநாயகனாக நடித்துள்ளார். இவர் பெயரை எங்கேயோ கேள்விப்பட்டது மாதிரி இருக்கிறதா? இவர் ஆண்மை தவறேல், யாக்கை படங்களை இயக்கியுள்ளார். வெளிநாட்டில் இப்படிப்பட்ட படம் எடுக்கிற ஒரு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு இதை பற்றி அறிந்து. அந்த தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நர்மதாபாலு. இவர் வேறுயாருமல்ல, இயக்குனரின் காதல் மனைவி.

ஒரு இளம் ஜோடியின் வாழ்க்கையில் காலை 9 மணிக்கு என்ன நடக்கிறது. காலை 9மணிக்கு டைம் லுாப்பில் மாட்டிக்கொள்ளும் மனைவி. அதிலிருந்து வெளியே வந்தாரா? அந்த டைம் லுாப்பில் நடக்கும் சுவாரஸ்யங்கள் என்ன என்பதை கதையாக சொல்லி இருக்கிறார்கள். தாங்கள் அப்படி எடுத்த படத்தை சமீபத்தில் திரையுலக பிரமுகர்கள், மீடியாவுக்கு காண்பித்தனர் இயக்குனர், அவர் மனைவியும்

இது குறித்து இயக்குனர் குழந்தை வேலப்பன் கூறியது: ‘‘உலகில் இப்படிப்பட்ட புது முயற்சிகள் தொடங்கிவிட்டன. வருங்காலத்தில் வெர்ட்டிகிள் பார்மெட்டில் படங்கள் அதிகம் வரும். அதற்கான தனி மார்கெட் உருவாகும். கேன்ஸ் திரைப்படவிழாவில் ஒரு கருத்தரங்கில் இது குறித்து அறிந்தேன். இந்த முயற்சியை நண்பர்கள் உதவியால் இந்தியாவில் முதன்முறையாக தைரியமாக எடுத்தேன். ஆனால், படமாக்குவது கஷ்டமானது, சாவல் நிறைந்தது. இதற்காக கேமரா கோணத்தை மாற்றினோம். நடிக்க பயற்சி எடுத்தோம். 15 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. சில வாரங்கள் போஸ்ட் புரடக் ஷன் நடந்தது. இந்தவகை படத்தை தியேட்டரில் திரையிட வசதி இல்லை. எனவே, வெர்ட்டிகிள் லா சினிமா என்ற யூ டியூப்பில் வெளியிடுகிறோம். இந்த படம், கனடாவில் உள்ள டோரண்டோ திரைப்பட விழா, இத்தாலி திரைப்பட விழாக்களில் திரையிட்டு விருதுகளை அள்ளியுள்ளது. வருங்காலத்தில் இப்படிப்பட்ட படங்களை தயாரிக்க உள்ளோம்.

இனிவரும் காலத்தில் வரும் தலைமுறையினருக்கு மொபைலை திருப்புவதற்கு கூட சோம்பேறித்தனமாக இருக்கும் அந்த சோம்பேறித்தனத்தை எப்படி காசாக்கலாம் என்பதற்கான கான்செப்ட் தான் இந்த வெர்டிகிள் சினிமா ஐடியா. வருங்காலத்தில் செல்போல் அல்லது அதன் அடுத்த வடிவம்தான் உலகை ஆளப்போகிறது. மூளையை விட அந்த சாதனைத்தான் அதிகம் பயன்படுத்தப்போகிறோம்.’’ என்றார்

**மீனாட்சிசுந்தரம்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles