கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோ ஜூ ஜார்ஜ், நாசர், கருணாகரன் உட்பட பலர் நடித்த படம் ரெட்ரோ. தலைப்பிற்கு ஏற்ப கதை அந்த காலத்தில் நடக்கிறது.
1960 களில் கதை தொடங்குகிறது. சூர்யாவின் சின்ன வயது கேரக்டர் அறிமுகம் ஆகிறது. 1993 ல் பெரும்பாலான கதை நடக்கிறது. அதில் அவர் காதல் சீன், சண்டை நகர்கிறது. அடுத்து போர்ஷன் சில ஆண்டுகள் கழிந்து அந்தமானில் நடக்கிறது. அதில் வில்லன் மோதல், கிளைமாக்ஸ் போன்றவை நடக்கின்றன
தூத்துக்குடி தாதா ஜோ ஜூ ஜார்ஜ் வளர்ப்பு மகன் சூர்யா. அப்பா பாணியில் குட்டி தாதாவாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் கோல்ஸ் பிஸ் என்ற கடத்தல் பொருள் தொடர்பாக அப்பா, மகன் இடையே மோதல் வருகிறது. சூர்யா திருமணத்தன்று அவர் மனைவி பூஜா ஹெக்டேவை மாமனார் ஜோஜூ கொல்ல முயல, அவர் கையை வெட்டிவிட்டு ஜெயிலுக்கு போகிறார் சூர்யா. அதனால் கோபித்து கொண்டு காணாமல் போகிறார் பூஜா. சில ஆண்டுகள் கழித்து பூஜா ஹெக்டே அந்தமானில் இருப்பதை அறிந்து ஜெயிலில் இருந்து தப்பிக்கிறார் சூர்யா. அங்கே சென்றால் ரப்பர் தோட்ட உரிமையாளரன நாசரும், அவர் மகன் விதுவும் தோட்ட தொழிலாளர்களை அடிமையாக நடத்துவதை அறிந்து கொதிக்கிறார். அவர்களுக்கும் சூர்யாவுக்கும் என்ன சம்பந்தம்? அவர்களுக்கு விடுதலை வாங்கிக்கொடுத்தாரா? பூஜா ஹெக்டேவுடன் இணைந்தாரா? அப்பா, மகன் மோதல் என்னாச்சு? கோல்டு பிஸ் கண்டுபிடிக்கப்பட்டதா என்பது ரெட்ரோவின் மீதி கதை.
கார்த்திக்சுப்புராஜ் படங்களுக்கே உரிய பாணியில், வித்தியாசமாக, விறுவிறுப்புடன் படம் தொடங்குகிறது.
ஆரம்பித்த சில நிமிடங்களில் இது பக்கா ஆக்சன் படம் தெரிந்து விடுகிறது. அதற்கேற்ப பல கெட்டப்களில், பல சண்டை காட்சிகளில் கலக்கி இருக்கிறார் சூர்யா, அவருக்கும் , பூஜாவுக்குமான காதல் சீன் கள், ஜெயராமுடனான காமெடி சீன் கள் ரசிக்க வைக்கிறது. தோட்ட தொழிலாளர் விடுதலைக்காக போராடுவது டச்சிங்..கன்னிம்மா பாடலில் டான் சிலும் சூர்யா பின்னி எடுத்து இருக்கிறார். ஆனாலும், சூர்யா மீதான சமூக பொறுப்புள்ள, நிஜ இமேஜ் காரணமாக அவர் கேரக்டருக்காக தம் அடிப்பதை, சரக்கு அடிப்பதை ஏற்க முடியவில்லை.
பூஜா ஹெக்டே அழகாக இருக்கிறார். அசத்தலாக டான்ஸ் ஆடுகிறார். வில்லனாக வரும்.ஜோ ஜு ஜார்ஜ் மேனரிசம். டயலாக் டெலிவரி செம. ஜெயராம் மாறுபட்ட கெட்டப்பில் காமெடி செய்து இருக்கிறார். ஆனாலும் , நாசர், கருணாகரன், பிரகாஷ்ராஜ் உட்பட பலர் வீணடிக்கப்பட்டுள்ளனர்.
படத்தில் இரண்டாவது ஹீரோ இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான். பாடல், பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். ஆனாலும் சில இடங்களில் சத்தம் ஓவர். ஸ்ரேயாசரண் ஆடிய அந்த பாடல் காட்சி வீண். ஸ்ரேயாஸ் ஒலிப்பதிவு அந்தமானை அழகாக காண்பித்து இருக்கிறது. சண்டைக்காட்சிகளில் வேகத்தை கூட்டுகிறது
படத்தின் நீளம் அதிகமோ என சில நேரம் தோன்றுகிறது. ஆக்சன் காட்சிகள் அதிரடி என்றாலும் சில சமயம் ஓவர் டோஸ். பெரும்பாலான காட்சிகளில் ஹீரோ யாருடனாவது சண்டை போடுகிறார்கள், சண்டைக்கு தயாராகிறார்கள். பல சண்டை காட்சி புதுமை என்றாலும் ஒரு கட்டத்தில் போராடிக் கிறது. சூர்யாவுக்கும் அந்த அடிமை மக்களுக்குமான உறவு, பிளாஷ்பேக் காட்சிகள் உருக்கம்
அதிரடி ஆக் ஷன் படம் என்றாலும், சிரிப்பை மையமாக வைத்து சொல்லப்பட்ட வசனங்கள், சீன்கள், தம்மம் என்பதன் விளக்கம், கிளைமாக்சில் பலரும் சிரிப்பது அருமை. பக்கா ஹீரோயிச கதை. அதை ரசித்து எடுத்து இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ஆக்சன் பிரியர்களுக்கு, சூர்யா ரசிகர்களுக்கு ரெட்ரோ விருந்து.
மீனாட்சிசுந்தரம்
**

