விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செல்வி கேரக்டரில் நடித்து வருபவர் தான் கம்பம் பகுதியை சேர்ந்த சீரியல் நடிகை மீனா.
இவர் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா வீட்டு வேலைக்காரியாகவும் தோழியாகவும் நடித்து சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.
இரண்டு வருடங்களுக்கு மேல் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் அரைத்த மாவையே தொடர்ந்து அரைத்தாலும் இந்த சீரியலுக்கென தனி ரசிகர்கள் இருக்குத்தான் செய்கிறார்கள்.
தற்போது பாக்கியலட்சுமி சீரியலும் பாண்டியன் ஸ்டார் 2 சீரியலும் இணைந்து மகா சங்கமமாக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் கம்பம் மீனா அவரது குடும்பத்தோடு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
குடும்பத்தோடு திருச்செந்தூர் முருகனை தரிசித்த கம்பம் மீனா கோவிலில் எடுத்து கொண்ட புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது குடும்பத்தோடு இருக்கும் கம்பம் மீனாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

