வில்லிதிருக்கண்ணன் இயக்கத்தில் மகேஷ், கதாநாயகி வைஷ்ணவி நடிக்கும் படம் ஆண்டவன். சென்னையில் நடந்த இந்த பட விழாவில் இயக்குனர் கே. பாக்யராஜ் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். இந்த படத்தில் அவர் கலெக்டராக நடித்துள்ளார்.
‘‘ஆளில்லாத கிராமங்கள் அதிகரித்து வருகிறது, கிராமங்களை காப்பாற்றுங்கள் என்ற கருவில் படம் உருவாகிறது. படம் குறித்து கே. பாக்யராஜ் பேசியது ‘‘இந்த நிகழ்ச்சியில் எனக்கு முருங்கைகாய் கொடுத்தார்கள், மகிழ்ச்சியாக இருந்தது. நான் பள்ளியில் படிக்கும் ஒரு வாத்தியார் செய்து எனக்கு நினைவுக்கு வருது. நாம் ஸ்பெல்லிங் தவறாக சொன்னால். அதை திருத்துவார். ஒருமுறை ஒரு பையன் பிளாட்பார்ம் என்று சொல்ல தெரியவில்லை. அவனை அவரால் திருத்த முடியவில்லை. மற்ற வாத்தியார் கிளாசில் கூட, அந்த வாத்தியார் வந்து அந்த மாணவனில் தவறை திருத்த முயற்சிக்க நினைப்பார். அவரிடம் யார் சிக்குவார்கள், என்னென்ன செய்வார் என்பதை நாங்கள் காமெடியாக நினைப்போம். ஆனால், அவர் மாறவில்லை, அவர் கேரக்டர் அப்படி. தவறாக பேசக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். இந்த பட இயக்குனர் வில்லிதிருக்கண்ணன் கூட தனது எண்ணத்தில் உறுதியாக இருந்தார். நல்ல கருத்தை சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட படங்கள்தான் எடுப்பேன் என தீர்மானமாக இருக்கிறார். ஜனங்களின் கஷ்டத்தை இந்த படத்தை சொல்லியிருக்கிறார். ஒரு சோஷியல் சர்வீஸ் கதையை இந்த படத்தில் சொல்லியிருக்கிறார். நம்மால் பல கிராமங்கள் பயன் அடைய வேண்டும் என்று நினைக்கிறார். அது நல்ல விஷயம்.
நம் சினிமாவில் இப்படிதான் ஹீரோ இருக்க வேண்டும் என்று மனதில் நினைத்து வைத்து இருப்போம். எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. மோட்சம் செல்லும் ஒரு மந்திரத்தை தனது சிஷ்யனுக்கு சொல்லிக்கொடுத்தார் தனது குரு. மற்றவர்களுக்கு சொல்லாதே, சொன்னால் உன் தலை வெடித்துவிடும் என்று எச்சரித்தார். ஆனால், அந்த சிஷ்யனோ, மறுநாள் கோயில் கோபுரத்தில் ஏறி, ஓம் நமோ நாராயணா என்ற மந்திரமே மோட்சம் செல்லும் மந்திரம். நான் இறந்தாலும் பரவாயில்லை, ஊர் மக்கள் மோட்சம் செல்ல வேண்டும் என்று நினை த்தார் அந்த சிஷ்யன். அவர்தான் மகான் ராமானுஜர். இந்த படக்குழு ஒரு விஷயத்தை வீடியோவாக பதிவு செய்து, கலெக்டர் வரை அதை சென்றார்கள். அதற்கு தீர்வு கிடைத்தது. அந்த கிராமத்துக்கு நானும் சென்று நிலைமை பார்த்தேன். அந்த ஊரில் ஒரு வைத்தியர், அவர் மனைவி மட்டுமே இருக்கிறார்கள். அந்த கேரக்டரை சினிமாவில் பதிவு செய்தார். அந்த வை த்தியருக்கு கலெக்டர் வீடு கட்டி கொடுத்தார். அந்த நிஜ சம்பவத்தின் சினிமாவில் நான் கலெக்டராக நடித்து இருக்கிறேன். சூழ்நிலைகளால் சொந்த இடத்தை விட்டு சிலர் செல்கிறார்கள். கிராமங்களில் மக்கள் காணாமல் போகிறார்கள். மக்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்ற கருவை இந்த படம் சொல்கிறது. பல ரியல் லை ப் கேரக்டர் இந்த படத்தில் ரீல் லைப் ஆக நடித்து இருக்கிறார்கள். மே 16ம் தேதி படம் திரைக்கு வருகிறது’’ என்றார்
மீனாட்சிசுந்தரம்

