3.5 C
New York
Tuesday, December 23, 2025

Buy now

எமன் கொடுத்த 3 வரங்கள்.. மயில்சாமி மகன் காதல் கை கூடியதா?

விமர்சனம்/ எமன் கட்டளை
**

 

அந்த காலத்தில் இருந்து எமதர்மன் பின்னணியில் தமிழில் பல படங்கள் வந்துள்ளன. அவை ரசிக்க
கூடியதாக இருந்தது. அந்தவகையில், எஸ்.ராஜசேகர் இயக்கத்தில் மறைந்த நடிகர் மயில்சாமி மகன் அன்பு ஹீரோவாக நடிக்க எமன் பின்னணியில் வந்துள்ள படம் எமன் கட்டளை. இந்த படத்தை எஸ்.ஏ.கார்த்திகேயன் தயாரித்துள்ளார். எமனாக நெல்லை சிவா நடிக்க, சந்திரிகா ஹீரோயின். இவர்களை தவிர, ஆர்.சுந்தர்ராஜன், சார்லி, வையாபுரி, பவர் ஸ்டார், டி.பி.கஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர்

உதவி இயக்குனரான அன்பு, படம் தயாரிக்கும் ஆசையில் பணத்துக்காக திருமண மண்டபத்தில் திருடுகிறார். அந்த திருமணம் நிற்க, மணப்பெண், அவர் தந்தை விஷம் குடிக்கிறார்கள். அந்த குற்ற உணர்ச்சியில் அன்பும் விஷம் குடித்து இறக்கிறார். எமனை சந்திக்கிறார். அவரோ அந்த பெண் திருமணம் நிற்க நீயே காரணம். ஆகவே, மீண்டும் பூலோகம் செல். அந்த பெண்ணுக்கு நல்ல மாப்பிள்ளையை தேடி, திருமணம் செய்து வை , 3 மாதத்தில் மீண்டும் இறந்துவிடுவாய்’’ என்று கட்டளை இடுகிறார். அன்புக்கு உதவிகரமாக இருக்க, 3 வரங்களை தருகிறார். பல மாப்பிள்ளைகளை தேடுகிறார் அன்பும், அவர் நண்பர் அர்ஜூனனும், ஆனால், அந்த மாப்பிள்ளை அல்லது அவர் பின்னணி தவறாக இருக்க, திருமணம் தள்ளிப்போகிறது. சூழ்நிலை காரணமாக 2 வரங்களை பயன்படுத்திவிடுகிறார் அன்பு. ஹீரோயின் முறைமாப்பிள்ளை அவரை வலுக்கட்டாயமாக திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார். கடைசியில் அன்பு என்ன முடிவெடுத்தார். கடைசி வரத்தை எப்படி பயன்படுத்தினார். அன்பு, சந்திரிகா காதல் கை கூடியாது. அன்பு எமன் பிடியில் சிக்கினாரா என்பது எமன் கட்டளை படம்.

முதலில் எமனாக நடித்த, மறைந்த நெல்லை சிவாவை பாராட்ட வேண்டும். அவர் உருவமும், அந்த கெட்அப்பும், பாடி லாங்குவே ஜூம் படத்துக்கு பலம். சூழ்நிலையில் தவித்துக்கொண்டு எதையும் காதலியிடம் வெளிப்படையாக சொல்ல முடியாமல், அவருக்கு மாப்பிள்ளை தேடுகிற கேரக்டரில் அன்பு நன்றாகவே நடித்துள்ளார். எமனுக்கும், அவருக்குமான சீன்கள் ரசிக்க வைக்கின்றன. அன்பு நண்பராக வரும் அர்ஜூன் அவ்வப்போது ஜோக் அடிக்கிறார்
காதலை சொல்ல முடியாமல், காதலனிடம் இருந்து உரிய பதில் கிடைக்காமல் தவிக்கிற கேரக்டரில் சந்திரிகாவும் நன்றாக நடித்துள்ளார்.

மறைந்த நட்சத்திரமான இயக்குனர் டி.பி. கஜேந்திரன் ஹீரோயின் அப்பா கேரக்டரில் உருக்கமாக நடித்துள்ளார். கராத்தே ராஜாவுக்கு வில்லன் வேடம். பவர் ஸ்டார், வையாபுரி உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் இருக்கின்றன. கடைசி அரை மணி நேர கிளைமாக்ஸ், கடைசி வரத்தை புத்திசாலிதனமாக பயன்படுத்தும் காட்சிகள் விறுவிறு.

என்.சசிகுமார் இசை, வி.சுப்பையன் கதை, வசனம் ஓகே. வழக்கமான அடிதடி, பழி வாங்கும் படங்களுக்கு மத்தியில் காமெடி கலந்த அருமையான காதல் கதையாக வந்து ரசிக்க வைக்கிறது எமன் கட்டளை.

மீனாட்சிசுந்தரம்

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles