1.9 C
New York
Monday, December 22, 2025

Buy now

இளமை தோற்றத்தை தக்க வைக்கும் மருத்துவமனை நடிகை சாக் ஷி அகர்வால் திறந்து வைத்தார்

 

சென்னையில் முதன்முறையாக நீண்ட ஆயுளை அடிப்படையாகக் கொண்டு மீளுருவாக்க மருத்துவமனை APEX WELLNESS CO நீலங்கரையில் திறக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகை சாக்ஷி அகர்வால் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டு, வருமுன் காப்போம் என்கிற அடிப்படையில், உடல்நலக் கோளாறு ஏற்படும் முன் மக்கள், அவர்களை நன்கு பராமரிப்பதற்கான நோக்கத்திற்கு தனது ஆதரவை வழங்கினார்.

15 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ பயிற்சியில் அனுபவம் வாய்ந்த, மூத்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர். தினேஷ்சந்தர், தனது பயணத்தில், இயற்கையான பரிணாமமாக இந்த மருத்துவமனையைத் தொடங்கியுள்ளார். இக்கட்டான சூழலில் அறுவை சிகிச்சைகள் உங்களுக்கு உதவலாம்., ஆனால் ஆரம்ப நிலையில் சுகவீனம் கண்டறியப்பட்டால் என்ன நடக்கும்? என கேள்வி எழுப்பும் மருத்துவர் தினேஷ்சந்தர், மக்கள் சீர்குலைவதற்கு முன்பு, அவர்கள் சிறப்பாக செயல்படவும், வலுவாக வாழவும், முதுமையை தள்ளிபோடவும் செய்தால் என்னாகும்? என்கிறார். அதைத்தான் அபெக்ஸ் வெல்னெஸ் கோ(Apex Wellness co.) செய்கிறது என்றும் அவர் தெரிவிக்கிறார்.

சுகாதாரம், தொலைநோக்கு பார்வையை சந்திக்கும் இடத்தில் உங்கள் உடலை மறுசீரமைப்பு செய்யவும், புத்துணர்ச்சியடையவும், மீளுருவாக்கம் செய்யவும் உங்களுக்கு உதவுவதாக மருத்துவர் தினேஷ்சந்தர் ஆண்டியப்பன் தெரிவிக்கிறார். ஆற்றல் மீட்பு, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செல்லுலார் நல்வாழ்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் சிகிச்சைகளை வழங்க மருத்துவ கடினத்தன்மை மற்றும் பிரத்யேகமான கவனிப்பை அபெக்ஸ் வெல்னஸ் கோ (Apex Wellness co.) ஒருங்கிணைக்கிறது என்றும் அவர் உறுதியளிக்கிறார்.

ஆற்றல், பளபளப்பு, நச்சு நீக்கம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மிகக்கவனமாக வடிவமைக்கப்பட்ட காக்டெய்ல் IV மருந்து உள்ளிட்ட பிரத்யேக வசதிகளுடன், பிரதியாக NAD + சிகிச்சை இங்கு வழங்கப்படுகிறது. மேலும், வளர்சிதை மாற்ற மற்றும் செல்லுலார் மேம்பாட்டிற்கு உடலுடன் தொடர்புடைய நெறிமுறைகளை
டாக்டர் தினேஷ்சந்தரின் வழிகாட்டுதலின் கீழ் பிஆர்பி, ஸ்டெம்சல் தெரபி உள்ளிட்ட எலும்பியல் மீளுருவாக்க சிகிச்சைகளோடு, மிகச்சரியான ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. இந்த மருத்துவமனையின் தனிச்சிறப்பு, தனிநபர்கள் தங்கள் இளமைத் தோற்றத்தை தக்கவைத்துக் கொள்ள மிகச்சிறந்த நோயறிதல் சிகிச்சை முறைகளும் இங்கு வழங்கப்படுகின்றன.

அபெக்ஸ் வெல்னஸ் கோ (Apex Wellness co.) நிறுவனத்தில் உள்ள சிகிச்சைத் திட்டங்கள் குறுகிய கால நிவாரணத்தைக் காட்டிலும் நீண்டகால ஆரோக்கியத்தை வளர்க்கும் நோக்கில், தனிப்பட்ட முறையில் உருவாக்கப்பட்டவை. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு அமைதியான சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள அபெக்ஸ் வெல்னஸ் கோ.(Apex Wellness co.)ஒரு வழக்கமான மருத்துவமனை போன்றதல்ல. அமைதியான ஆலோசனை அறைகள் மற்றும் IV ஓய்வறைகளுடன் அமைந்த உட்புறங்கள் தனிநபர்கள் நிறுத்தவும், புதுப்பிக்கவும், ஆரோக்கியத்தைப் பற்றி வித்தியாசமாக சிந்திக்கவும் அழைக்கப்படும் இடமாகும்.

இது உடல் இருக்கும் இடத்தை மதித்து, செழிக்க சிறந்த வளங்களை வழங்குவதாகும் என தெரிவிக்கும் மருத்துவர் தினேஷ் சந்தர்,அபெக்ஸ் வெல்னஸ் கோ (Apex Wellness co.) இப்போது ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை நியமனங்களை எடுத்து வருகிறது என்றும், செயல்திறன் மிக்க ஆரோக்கிய தீர்வுகள், ஒருங்கிணைந்த ஆரோக்கிய பராமரிப்பு மற்றும் அறுவைசிகிச்சை அல்லாத மறுவாழ்வு சிகிச்சை ஆகியவற்றைத் தேடுபவர்களை இந்த மருத்துவமனை வரவேற்கிறது என்றும் தினேஷ் சந்தர் தெரிவித்துள்ளார்
வயதாவதை தடுக்க முடியாது. ஆனால், அதை சரியாக மருத்துவம் பார்த்தால் அதை மாற்றலாம். அதற்கான பணிகளை இந்த மருத்துவமனை செய்கிறது. நான் இங்கு வந்து நேரில் பார்த்தேன். பல அரிய விஷயங்களை தெரிந்துகொண்டேன். இந்த மருத்துவமுறைகள் ஆச்சரியம் அளிக்கிறது. பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றார்

மீனாட்சி சுந்தரம்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles