தாங்கள் படித்த கல்லுாரி அல்லது பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு விருந்தினராக செல்வது, அங்கே பேசுவது, மாணவர்களுடன் உரையாடுவது, அந்த நிர்வாகத்தின் கவுரவத்தை ஏற்பது இதெல்லாம் சில சாதனையாளர்கள், சில செலிபிரட்டிக்கு மட்டுமே வாய்ப்பாக அமையும். இந்த விஷயத்தில் இயக்குனர் அட்லீ இன்னும் அதிர்ஷ்டசாலி அல்லது உழைப்பாளி என்று சொல்ல வேண்டும்.ஆம், தான் கல்வி கற்ற சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைகழகத்தின் 34வது பட்டமளிப்பு விழாவில் டாக்டர் பட்டத்தை பெற்று இருக்கிறார்.
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைகழகத்தின் 34வது பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் மரிய ஜான்சன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார் அட்லீ. பின்னர் அவர் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில் ‘‘இன்று நான் ஒரு பெரிய டைரக்டர் ஆக இருக்கலாம். ஆனால் சினிமாத் துறையில் நிலைத்திருக்க வேண்டும் என்றால் நெருப்பில் நிற்பதை போன்றது. ஆனால் நான் கல்லூரியில் படிக்கும்போது அட்லி என்ற அருண் குமார் நெருப்பு போன்று இருப்பான். நான் இப்போது ஐந்து மணி நேரம் தூங்குகிறேன். அவன்
அருண் இரண்டு மணி நேரம் தான் தூங்குவான். இளம் வயதில் நாம் என்னவாகப் போகிறோம் என்று எல்லோர் மனதிலும் ஒரு விதை இருக்கும். அது மிகவும் வலுவாக இருக்க வேண்டும்.பொதுவாக என்னுடைய படங்களை நான் அங்கிருந்து எடுத்தேன், இங்கிருந்து எடுத்தேன் என்று சொல்வார்கள். ஆனால் நான் இப்போது ஒரு உண்மையை சொல்லப் போகிறேன். நான் என்னுடைய வாழ்க்கையில் நான் பார்த்த விஷயங்களைத்தான் எடுக்கிறேன். உங்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், ‘பிகில்’ படத்தில் வரும் ராயப்பன் கதாபாத்திரத்தை ஜேபிஆர் இடமிருந்து தான் எழுதினேன்.அவரை நீங்கள் பலர் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை, ஆனால், அவரின் பேச்சு நடையில் எப்போதும், கம்பீரமும், நேர்மையும் இருக்கும். ஜேபிஆர் பலரின் கல்விக்கு உதவி செய்து வருகிறார் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், விளையாட்டு பெரும் துணையாக, ஊக்கம் அளித்தவர் அவர்.
இந்த டாக்டர் பட்டத்துக்கு நான் எவ்வளவு தகுதியானவன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அதை தக்க வைப்பேன், தொடர்ந்து உழைப்பேன்.எனக்கு கொஞ்ச நாளாக பொய் சொன்னால், இருமல் வந்துவிடுகிறது. இப்போது நான் எதாவது பொய் சொன்னால் இரும்பி விடுவேன் நாம் ஊருக்கு என்னவாக இருந்தாலும், வீட்டுக்கு அரசன் என்று சொல்வார்கள். அரசனாக வேண்டும் என்றால், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், போருக்கு செல்ல வேண்டும். ஆனால், இது எல்லாம் செய்வதற்கு முன்பே நம்மை அரசனாக்கி அழகு பார்த்தவர்கள் நம் பெற்றோர். ஆனால், இந்த கல்லூரி என்னை ஆரம்பத்தில் இருந்தே வெற்றியாளனாகவே பார்த்தது. அதற்கு சத்யபாமா பல்கலைக்கழகத்திற்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் இந்த கல்லூரியில் சேர்ந்தவுடனே ஒரு குறும்படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். படிப்பு தான் முக்கியம், இப்போது எதுக்கு இந்த வேலை என்று சொல்லாமல், ஜேபிஆர் சார் அவர்கேமிராவை எடுத்துக்கோ நல்ல படம் எடு சீக்கிரம் இயக்குநராக மாறு என்று அசீர்வாதம் செய்தார். அவரின் ஆசிர்வாதம் இன்று என்னை ஒரு இயக்குநராக ஆக்கி இருக்கிறது. இன்று நான் ஒரு பெரிய இயக்குநராக இருக்கலாம். ஆனால் சினிமாத் துறையில் நிலைத்திருக்க வேண்டும் என்றால் நெருப்பில் நிற்பதை போன்றது. என் குடும்பம், என் நண்பர்கள் பெரியது. தளபதி விஜய் என் அண்ணன் ’’ என்றார்
இந்த பட்டமளிப்பு விழாவில் பல்கலைகழகத்தின் துணைத் தலைவர்கள் மரிய பெர்னதித் அருள் செல்வன், அருள்செல்வன், மரியா கேத்தரின் ஜான்சன் ஆகியோர் பங்கேற்றனர்.34 வது பட்டமளிப்பு விழாவில், சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் 4221 இளங்கலை பட்டதாரி மாணவர்களுக்கும், 810 முதுநிலை பட்டதாரி மாணவர்களுக்கும், 79 பிஎச்டி மாணவர்களுக்கு டாக்டர் பட்டத்தை பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன் வழங்கினர்.
சாதனை மாணவர்கள் 54 பேருக்கு தங்க மெடல்கள் என மொத்தம் 5031 மாணவர்களுக்கு சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பட்டங்கள் வழங்கப்பட்டது.
சத்தியபாமா பல்கலைக்கழகம் குறித்து அதன் நிர்வாகம் கூறுகையில் ‘‘சத்தியபாமா தொடர்ந்து கேம்பஸ் தேர்வில் அதிகபட்ச மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று தருகிறது.
சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 2024- 2025 கல்வி ஆண்டில் சுமார் 400 நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தின. இதில் மொத்த மாணவர்களில் 92.74% மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றனர். இந்த மாணவர்கள் ஆண்டுக்கு அதிகபட்ச ஊதியம் 41,20,000, குறைந்தபட்ச ஊதியமாக 5,70,000 தேர்வு செய்யப்பட்டனர். இதன் மூலம் பல்கலைக்கழகத்தின் தரம் மற்றும் கற்பித்தல் திறன் நன்கு தெரிகின்றது’ என்றனர்
மீனாட்சிசுந்தரம்.


