ரூ.10 லட்சம் மதிப்பில், ஆயிரம் மகப்பேறு நலப்பொருட்கள்
உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ரோட்டரி சங்கம் கிப்ட்
இந்த ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 5 வரை நடக்கும் உலக தாய்ப்பால் வாரத்தில் அரசு மருத்துவமனைகளில் 1000 மகப்பேறு நலப்பொருட்கள் அடங்கிய தொகுப்பை , சென்னை மாவட்டம் முழுவதும் 40 க்கும் மேற்பட்ட ரோட்டரி சங்கங்கள் மற்றும் ரோட்டரி சென்னை மாவட்டம் 3234 இன் கிளப் ஃபர்ஸ்ட் லேடிஸ் இணைந்து RAW 2 அதாவது ROTARY ACTION for WOMEN -2 எனும் முயற்சியின் கீழ் வழங்குகின்றனர். சமூக சேவை மற்றும் தாய்வழி சுகாதார ஆதரவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய தாய்மார்களுக்கு இந்த மகப்பேறு நலப்பொருட்கள் பயனளிக்கும். மேலும் இந்த மருத்துவமனைகளுக்கு மிகவும் தேவையான உபகரணங்களும் உலக தாய்ப்பால் வாரத்துடன் இணைத்து நன்கொடையாக வழங்கப்பட உள்ளது.
ரோட்டரி சங்கத்தின் டாக்டர்.சூசன் வர்கீஸ், சூரியநாராயண ராவ், உஷா சரோகி மற்றும் வினோத் சரோகி உள்ளிட்டோர் வழங்க திட்டமிட்டு,ராயபுரம் RSRM மருத்துவமனையில் இம்முயற்சியை தொடங்கினர்.
ரோட்டரி சங்கத்தின் முதல் பெண்மணி ஆர். டி. என் உஷா சரோகியின் சிந்தனையால் தொகுக்கப்பட்டு, மகளிர் சுகாதாரக் குழுவை வழிநடத்தும் ரொட்டேரியன் டாக்டர்.சூசன் வர்கீஸ் மற்றும் CSH இன் இயக்குனர் ஆர். டி. என் சூரியநாராயண ராவ் தலைமையில் செயல்படுத்தப்படுகிறது
ராயபுரம் RSRM மருத்துவமனையில் தொடங்கும் இந்த பயணம் சென்னையின் IOG மற்றும் ICH மருத்துவமனைகளில் 2 ஆம் தேதியும், ஆகஸ்ட் 3 ஆம் தேதி KGH-ISO மருத்துவமனையிலும், 4 ஆம் தேதி ஷெனாய் நகர் PHC மருத்துவமனையிலும், 5 ஆம் தேதி அடையாறு PHC மருத்துவமனையிலும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் சென்னையில் உள்ள சில முன்னணி மகப்பேறு மருத்துவமனைகளில் தாய்ப்பால் விழிப்புணர்வு மற்றும் தாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த தாய்ப்பால் வாரத்தில் ரோட்டரி சங்கம் அதிகபட்ச தாக்கத்தை உறுதி செய்கிறது.
இந்த முயற்சி பல சங்கங்களை ஒன்றிணைப்பதோடு, ஒவ்வொன்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் வழங்குகின்றன. மேலும் மகப்பேறு பராமரிப்பில் மிகவும் பின்தங்கியவர்களை ஊக்கப்படுத்தும் முயற்சி சரியாக சென்றடைவதையும் உறுதி செய்யும் விழிப்புணர்வையும் உருவாக்குகிறது.
மீனாட்சிசுந்தரம்
**

