2.7 C
New York
Tuesday, December 23, 2025

Buy now

பேய் இருக்கிறதா? ரத்தம் இருக்கிறதா? தாவுத் படவிழாவில் ராதாரவி கலகல


*

TURM புரொடக்ஷன் ஹவுஸ் என்ற பட நிறுவனம் சார்பில் S. உமா மகேஸ்வரி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரசாந்த் ராமன் இயக்கத்தில், லிங்கா, சாரா ஆச்சர் நடிப்பில், அடிதடி வெட்டு குத்துச் சண்டைக் காட்சிகளே இல்லாத ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள படம் “தாவுத்”. இம்மாதம் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின், இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள நேற்று கோலாகலமாக
நடைபெற்றது.

இதில் நடிகர் ராதாரவி பேசியதாவது…
சமீபமாக எனக்கு உடல் நிலை சரியில்லை. மன்னித்துக்கொள்ளுங்கள். சினிமாக்காரன் எப்போதும் தூங்கும் போது கூட காலை ஆட்டிக்கொண்டு தூங்க வேண்டும், இல்லையெனில் வேறு ஆளை போட்டு விடுவார்கள். இந்தப்படத்தில் இரண்டு நாள்கள் தான் வேலை பார்த்தேன். தம்பிதுரை தான் தயாரிப்பாளர் ஆனால் அவர் பெயர் வரவில்லையே எனப் பார்த்தேன், ஆனால் படத்தில் கதாப்பாத்திரத்திற்கு அந்தப்பெயர் வைத்து விட்டார். வாழ்த்துக்கள். படத்தில் பேய் இருக்கிறதா? இரத்தம் இருக்கிறதா? எனக்கேட்டேன் ஆனால் எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். இன்றைய காலத்தில் இதெல்லாம் வெற்றிக்குத் தேவைப்படுகிறது. ரஜினியே அத்தனை வெட்டு குத்து, இரத்தம் தெறிக்க நடிக்கிறார். அவரே இரத்தத்தை நம்பும்போது நம்மைச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. படத்தில் நாம் கொஞ்சம் சுயநலமாகத் தான் இருக்க வேண்டும். கதாப்பாத்திரத்திற்கு தயாரிப்பாளர் தன் பெயர் வைத்தது போல இருக்க வேண்டும். படம் மிக அருமையாக வந்துள்ளது. எல்லோரும் மிக நன்றாக நடித்துள்ளனர். படம் மிகப்பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள். தமிழ் வாழ வேண்டும் என்றால் அனைவரும் தமிழ்ப்படங்கள் பார்க்க வேண்டும்.
நாயகன் லிங்கா பேசியதாவது…,

சென்னை உங்களை அன்புடன் நான் நடித்த முதல் படம், அது வெளியாகி 10 வருடம் ஆகிறது. இப்போது ஹீரோவாக முதல் படம். அஜய் பிரதர் இப்படம் மூலம் தான் பழக்கம் அவர் நான் தான் லீடாக நடிக்கிறேன் என்றார். சாரா நான் தான் லீட் என்றார், கிட்டதட்ட படத்தில் நடிக்கும் அனைவருமே லீட் தான் என்றார்கள். இயக்குநர் எல்லோரிடமும் நீங்கள் தான் நாயகன் என சொல்லியிருக்கிறார். அதன் பிறகு நான் லீட் என சொல்வதையே நிறுத்திவிட்டேன். ஆனால் படம் பார்த்த பிறகு தான் புரிந்தது. படத்தில் எல்லோருக்குமே லீட் மாதிரியான கேரக்டர் தான். ஏதோ கொஞ்சம் அதிகமாக இருப்பதால் நான் லீட் எனச் சொல்கிறேன். நாயகி கூட எனக்குத் தான் காட்சிகள் அதிகம், ஆனால் போட்டுருக்க சட்டை என்னுடையதில்லை என்பது போல, அவர் எனக்கு ஜோடி இல்லை. பரவாயில்லை. தம்பிதுரை சார் படம் ஆரம்பிக்கும் போது பார்த்தேன் சம்பளம் எல்லாம் பேசினார், அதன்பிறகு ஒரு நாள் கூட ஷூட் வந்ததே இல்லை. இயக்குநர் பிரசாந்த் மீது முழு நம்பிக்கை வைத்தார். அவர் இந்தப்பணத்தை அவர் நலனுக்குச் செலவழித்திருக்கலாம். ஆனால் இந்தப்படம் எங்களை நம்பி எடுத்துள்ளார். உங்களால் பல குடும்பங்கள் சாப்பிட்டுள்ளது சார் நன்றி. படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது அனைவரும் திரையரங்கில் வந்து பாருங்கள் நன்றி.

இயக்குநர் பிரசாந்த் ராமன் பேசியதாவது…

சின்ன படங்கள் ஜெயித்தால் தான் இன்ட்ஸ்ட்ரி நல்லா இருக்குமெனச் சொல்வார்கள், அதை மனதில் வைத்து ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி. பாபி சிம்ஹா சார் இந்தப்படத்திற்குக் கடைசி நிமிடத்தில் உதவி செய்தார். அதே போல் இந்தப்படத்திற்கு உதவி செய்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு நன்றி. பீட்சா டெலிவரி பாயாக இருந்து இயக்குநர் ஆகியுள்ளேன். அதற்குக் காரணம் தயாரிப்பாளர் தம்பி துரை சார். அவர் வெத்தலையில் இருந்து பித்தலை எடுப்பவர். நல்ல பெயர் அவர் எடுத்துக்கொள்வார் ஏதாவது பிரச்சனை என்றால் என்னை மாட்டிவிடுவார். ரதாரவி சார் நடித்தால் நன்றாக இருக்கும் என்றேன், உடனே பேசி வரச்சொல்கிறார் என அவரிடம் அனுப்பிவிட்டார். நான் பயந்து கொண்டே போனேன் ஆனால் அவர் என்னை அவ்வளவு மரியாதையாக நடத்தினார். சார் சம்பளம் என கேட்டேன், நான் வந்தால் நீ நல்லா இருப்பேல்ல.. போ பார்த்துக்கொள்ளலாம் என்றார். அவர் மாதிரி ஆட்கள் இருப்பதால் தான், சின்ன பட்ஜெட் படங்கள் உயிர் வாழ்கிறது. தயாரிப்பாளர் எல்லாவற்றிலும் கணக்கு பார்ப்பார் ஆனால் சாப்பாட்டில் என்றுமே கணக்கு பார்த்ததில்லை. எல்லாமே என்னை நம்பி தந்துவிட்டார். அவர் நம்பிக்கையைக் காப்பாற்றி விட்டேன் என நம்புகிறேன். லிங்கா முதல் நாள் ஷீட்டில் 7 விதமாக நடித்துக் காட்டினார். எனக்கு என்ன தேவை என்பதைக் காட்டத்தான் அவ்வாறு நடித்தார். இந்த கதாப்பாத்திரத்திற்காக அவ்வளவு உழைத்துள்ளார். சாரா சிறப்பாக நடித்துள்ளார். சரத் ரவியை வில்லனாக யாரும் ஒத்துக்கொள்ளவில்லை, ஆனால் படம் பார்க்கும் போது அனைவரும் பாராட்டுவார்கள். நாயகி சாரா உலக சினிமா பார்ப்பவர்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும். இசையமைப்பாளர் ராக்கேஷ் என் நண்பன், என் அடுத்த படத்திற்கும் அவர் தான் இசையமைப்பாளராக இருப்பார். மிக அட்டகாசமாக இசையமைத்துள்ளார். படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. இம்மாதம் 12ஆம் தேதி 12 படம் வருகிறது அனைவரும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இந்த படத்திற்கு சரத் வளையாபதி மற்றும் பிரேண்டன் சுஷாந்த் இருவரும் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். அருண் பாரதி பாடல்களுக்கு ராக்கேஷ் அம்பிகாபதி இசையமைத்துள்ளார். R. K. ஸ்ரீநாத் எடிட்டிங் செய்ய,கலை இயக்கத்தை ஜெய் முருகன் மேற்கொள்ள, ஸ்ரீக்ரிஷ் நடனம் அமைத்துள்ளார்.
மீனாட்சிசுந்தரம்

**

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles