
என் காதலே/ விமர்சனம். 3/5
தமிழ்சினிமாவில் ஏகப்பட்ட முக்கோண காதல் கதைகள் வந்து இருக்கின்றன. அதில் இன்னும் கொஞ்சம் வித்தியாசமான கதையாக, அதுவும் கடல்புற பின்னணியில் வந்திருக்கும் படம் என் காதலே. பெண் இயக்குனர் ஜெயலட்சுமி இயக்கி, தயாரித்து இருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு
தாய்மாமன் மதுசூதனன் வளர்ப்பில் வளர்கிறார் ஹீரோ லிங்கேஷ்(கபாலி,பரியேறும் பெருமாள் படங்களில் நடித்தவர்). மீனவராக இருக்கும் அவரை மாமன் மகள் திவ்யா காதலிக்கிறார். திருமணம் நடக்க இருக்கிற சூழ்நிலை. அந்த சமயத்தில் வெளிநாட்டில் இருந்து தமிழ் கலாச்சாரத்தை அறிய அந்த மீனவ கிராமத்துக்கு வருகிறார் லியா. அவருக்கு ஊரை சுற்றி காண்பித்து, நம் மண்ணின் அருமை, பெருமைகளை விளக்குகிறார் லிங்கேஷ். இருவரும் காதல் வயப்படுகிறார்கள். இந்த சூழ்நிலையில் காதல் கை கூடியதா? மாமன் மகள், வெளிநாட்டு பெண் லியா இருவரில் யாரை திருமணம் செய்கிறார் லிங்கேஷ் என்பது கிளைமாக்ஸ்
மீன்பிடிக்கும் இளைஞராக, காதல் வயப்பட்டபின் ஆளே மாறியவராக நன்றாக நடித்து இருக்கிறார் லிங்கேஷ். குறிப்பாக, அத்தை மகளை அம்மாவாக அவர் பார்க்கிற காட்சிகள் டச்சிங். நாட்டு பெண்ணாக வரும் லண்டனை சேர்ந்த லியா நடிப்பும், அவர் பேச்சும் அருமை. தனது காதல் நிறைவேறுமா என அவர் தவிப்பதும், அத்தை மகனை விட்டுக்கொடுக்க முடியாமல் இன்னொரு ஹீரோயின் பதறி, பல வேலைகள் செய்வதும் சிறப்பு
சாண்டி சாண்டல்லா இசை, கஞ்சா கருப்பு, மாறன் அடிக்கும் காமெடி ஆறுதல். சுனாமியால் இழந்தை தங்கை மீது மதுசூதன் வைத்திருக்கும் பாசம், அவர் சொல்லும் தீர்வு. எதிரணியில் வில்லத்தனம் விறுவிறு.
மீனவ கிராம ஆளுமைகளாக வரும் மதுசூதனன், வில்லனாக வரும் காட்பாடி ராஜன் காட்சிகள் ஓகே. முக்கோண காதல் மாதிரி தெரிந்தாலும் மீனவ கிராமங்களின் நடைமுறை, அவர்களின் வாழ்க்கை,திருவிழா, காமெடி, கொண்டாட்டம், பாசம், சென்டிமென்ட் என அனைத்தையும் கலந்து கொடுத்து அசத்தியிருக்கிறார் இயக்குனர் ஜெயலட்சுமி.

