Geo india Foundation சார்பில் பொதுமக்களிடையே பசுமை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த பசுமை விழிப்புணர்வு ஓட்டம் (Eco-Themed Marathon) சென்னையில் நடந்தது. சென்னை YMCA மைதானத்தில் நடந்த இந்த மாரத்தானில் முதன்மை விருந்தினராக திரு. எம். அஷ்வின்,IRTS Deputy Development Commissioner, MEPZ, வர்த்தக அமைச்சகம், இந்திய அரசு, கௌரவ விருந்தினர் திருமதி அம்மு ஜெயராஜ் ஐஆர்எஸ், வருமான வரி துணை ஆணையர் பெனாமி தடை பிரிவு சென்னை, திரூ. கே. அசோக் மண்டல பொது மேலாளர், கெயில் (இந்தியா) லிமிடெட், சென்னை, திரு. பி. ஆசிர் பாண்டியன் பொதுச் செயலாளர் தலைமை நிர்வாக அதிகாரி ஒய்.எம்.சி.ஏ மெட்ராஸ் நிருபர் செயலாளர் ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வி கல்லூரி, திரு. முகேஷ் கார்க், நிர்வாக இயக்குனர் ரம்போல் இந்தியா, திரு. சுவாமி பிரேம் அன்வேஷிஜி நிறுவனர் அன்வேஷி அறக்கட்டளை ஆகியோர் கலந்து கொண்டு பசுமை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தனர். இவர்களுடன் சிறப்பு விருந்திரனாக நடிகை பார்வதி நாயர் மற்றும் திருமதி பிரியா ஜெமிமா, நிறுவனர் ஜியோ இந்தியா அறக்கட்டளை ஆகியோர் ஆகியோரும் இந்த நல்ல நிகழ்வை தொடங்கி வைத்தனர்
இந்த நோக்கம் குறித்து திருமதி பிரியா ஜெமிமா, நிறுவனர் Geo india Foundation
கூறுகையில், “Green Run என்பது ஓர் உடற்பயிற்சி நிகழ்வை விட உயர்ந்தது; இது நம் பசுமை பூமிக்கான பொறுப்புணர்வை எழுப்பும் ஒரு இயக்கம். இந்த இயக்கம் மூலமாக மரம் நடுதல், தூய்மை பராமரிப்பு, மற்றும் பசுமை வாழ்வை ஊக்குவிக்கிறோம். இந்த பணியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொள்ளலாம். இதில் பங்கேற்றவர்களுக்கு T-Shirt, மெடல், மற்றும் இனிமையான பரிசுகள், சுற்றுச்சூழல் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு குறித்த நோட்ஸ் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்வுக்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்கள் CSR திட்டத்தின் கீழ் ஆதரவு அளிக்கின்றன.’’ என்றார்
மீனாட்சிசுந்தரம்


