சென்னை தேனாம்பேட்டையில் உள்ள புகழ் பெற்ற செனடாப் சாலையில், தென்னிந்திய உயர் ரக சைவ உணவுகளின் சுவை மிகுந்த அனுபவத்தை வழங்கிடும் TAMARIND TALES உணவகம் தனது சேவையை தொடங்கி உள்ளது.
இது குறித்து உணவக உரிமையாளர்கள் சோனாக்ஷி மற்றும் கிரண் கூறியது:
இந்த உணவகத்தில் ஆந்திராவின் பெசரட்டின் மணம் நிறைந்த மசாலா முதல், கேரளாவின் இதமான தேங்காய் நறுமணம் நிறைந்த இதமான சூட்டுடன் கூடிய புட்டு கடலைக்கறி வரை, ஒவ்வொரு உணவும் உங்கள் நாவில் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும். கர்நாடகாவின் வெண்ணை தோசை மற்றும் சைவ சுவையுடன் மகுடம் சூடும் மங்களூரிய கிளாசிக் கோரி ரோட்டி உள்ளிட்டவை மிகவும் ஆர்வமுள்ள உங்கள் எதிர்பார்ப்புகளை உறுதியாக திருப்திபடுத்தும் வகையில் வழங்கப்படுகின்றன. TAMARIND TALES இல் உண்பது சுவையின் உச்சத்தை அனுபவிக்கும் உணர்வைக் கொடுக்கும்.
ஒரு சிறப்பான, மனதை வருடும் இடத்தில் அமைந்துள்ள இந்த உணவகத்தில், நுழைவாயிலில் ஒரு காஃபி கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தென்னிந்திய ஃபில்டர் காஃபியின் அசல் சுவையை அனுபவிக்க முடியும். அத்துடன் சூடான தின்பண்டங்கள், ஃபலூடா, பிரத்யேக இனிப்பு வகைகள், புதுமையான இனிப்பு ஃபில்டர் காபி சாஃப்டி, Tamarind Tales இன் சிறப்பு பிளெண்டிங் கிரீமி டெக்ஸ்சர் வித் போல்ட் காஃபி உங்களை பரவசப்படுத்தும்.
நீங்கள் ஒரு காலை சிற்றுண்டி, இதயப்பூர்வமானநீங்கள் ஒரு காலை சிற்றுண்டி, இதயப்பூர்வமான மதிய உணவு அல்லது நிதானமான இரவு உணவிற்கு வந்தாலும், TAMARIND TALES உங்களை மீண்டும் மீண்டும் ஈர்க்கும் ஒரு ஆத்மார்த்தமான, பிராந்திய சமையல் பயணத்தை வழங்கும் .
சென்னையில் மையப்பகுதியான தேனாம்பேட்டை செனடாப் சாலையில் திறக்கப்பட்டுள்ள TAMARIND TALES இன் காஃபி மற்றும் ஸ்நாக்ஸ் கவுண்டர் காலை 10 மணி முதல் இரவு 1 மணி வரையிலும், உணவு விடுதி மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் செயல்படும்..கணவன், மனைவியான நாங்கள் இந்த உணவகத்தை ஆர்வமுடன் தொடங்கி இருக்கிறோம். பல தென்னிந்திய ஸ்பெஷல் உணவுகள் இங்கே கிடைக்கும். செல்ப் சர்வீசும் இருக்கிறது. பார்க்கிங் வசதி உள்ளது.’’ என்றனர்.
மீனாட்சிசுந்தரம்


