2.6 C
New York
Tuesday, December 23, 2025

Buy now

72 மணி நேரத்தில் 200க்கும் அதிகமான இடங்கள் விற்று சாதனை திருச்சி ஸ்ரீரங்கம் ஜி ஸ்கொயர் ‘ஜென்’ பிரீமியம் வீட்டு மனை பிரிவில்.

 

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் நம்பகமான ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர், திருச்சி ஸ்ரீரங்கத்தில் சமீபத்தில் பிரீமியம் வீட்டு மனை மற்றும் வில்லாக்கள் திட்டமான ஜி ஸ்கொயர் ‘ஜென்’ திட்டத்தை அறிவித்தது. ஸ்ரீரங்கத்தின் மையப்பகுதியில், உலகப் புகழ்பெற்ற ரங்கநாத சுவாமி கோயிலுக்கு அருகில், இந்த வீட்டு மனைகள் திட்டம் அமைந்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக சமூக உணர்வை வளர்க்கும் வகையில், ஜி ஸ்கொயர் ஜென் டவுன்ஷிப்பில் பிரபல பாடகி நித்யஸ்ரீயின் இசை நிகழ்ச்சி மற்றும் ரோபோ சங்கர் மற்றும் ஸ்டாண்டப் நகைச்சுவை நடிகர் விக்னேஷ் விஜயன் ஆகியோர் பங்கேற்ற “ஜி ஸ்கொயர் உற்சவம்” பொழுதுபோக்கு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த திட்டம் துவக்கப்பட்ட 72 மணி நேரத்தில் இங்கு 200 க்கு மேற்பட்ட இடங்கள் விற்பனையாகி அபரிமிதமான வரவேற்பை பெற்றுள்ளது

இது குறித்து ஜி ஸ்கொயர் நிறுவனம் கூறுகையில் ‘‘ஜி ஸ்கொயர் ஜென் திட்டம், ஒரு சதுர அடி ரூ.6300 என்ற சலுகை விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது இப்பகுதியில் உள்ள மற்ற இடங்களைக் காட்டிலும் மிகக் குறைந்த விலையாகும். ஸ்ரீரங்கம், திருச்சியில் வேறு எங்கும் இல்லாத இந்த விலை, வீடு வாங்குபவர்கள் தங்கள் கனவை நனவாக்கும் ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கொள்ளிடம் மற்றும் காவேரி ஆற்றுக்கு இடையில் அமைந்துள்ள ஜி ஸ்கொயர் ஜென், அமைதியான சூழலை இங்கு இடம் வாங்குபவர்களுக்கு வழங்குகிறது. இங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில் புகழ்பெற்ற ரங்கநாதசுவாமி கோவில் உள்ளது. ஸ்ரீரங்கம் கோயில், வரலாற்று சிறப்புமிக்க மலைக்கோட்டை கோயில், திருவானைக்கோயில் மற்றும் அருகிலுள்ள அழகிய முக்கொம்பு மற்றும் கல்லணை அணைகள் ஆகியவற்றுடன், ஒவ்வொரு பாரம்பரிய இடங்களுக்கும் எளிதில் சென்றடையக்கூடியம் வகையில் அமைந்துள்ளது.
வரவிருக்கும் புதிய விமான நிலையம் மற்றும் புதிய பேருந்து முனையம் ஆகிய இடங்களுக்கு எளிதாக செல்லும் வகையில் போக்குவரத்து வசதியும் உள்ளது.’’ என்கிறது

இது குறித்து ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் பால ராமஜெயம் கூறுகையில், ஸ்ரீரங்கத்தில் எங்கள் திட்டத்திற்கு கிடைத்த அற்புதமான வரவேற்பால் நாங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறோம். இது எங்கள் நிறுவனத்தின் மீதான வாடிக்கையாளர் நம்பிக்கையையும், ஸ்ரீரங்கம் போன்ற கலாச்சார ரீதியாக வளமான மற்றும் முக்கியமான பகுதிகளில் அமைந்துள்ள பிரீமியம் குடியிருப்பு மனைகளுக்கான தேவை அதிகரித்து வருவதையும் காட்டுகிறது. பாரம்பரியம், போக்குவரத்து வசதி மற்றும் நவீன வாழ்க்கை முறையை ஒன்றிணைக்கும் இது போன்ற திட்டங்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற உத்வேகத்தை எங்களுக்கு இந்த மைல்கல் சாதனை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்றார்

மேலும் அவர் கூறுகையில், திருச்சியில் பாதுகாப்பான, நன்கு திட்டமிடப்பட்ட வீட்டு மனைகளுக்கான தேவை என்பது அதிகரித்து வருகிறது, மேலும் ஜி ஸ்கொயர் ஜென் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய விரும்பும் ஆர்வமுள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. அதன் அமைந்துள்ள இடம், நவீன வசதிகள் மற்றும் சிறந்த விலை ஆகியவற்றுடன், அமைதிக்கான சொர்க்கமாகவும் அது உள்ளது’’ என்றும் தெரிவித்தார்.

வெற்றி மற்றும் விரிவாக்கத்துடன், ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி நிறுவனமாக உள்ளது, வீடு வாங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு சிறந்த மதிப்பை வழங்கும் அதே வேளையில், இந்த துறையில் புதியதொரு உச்சத்தை அடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜி ஸ்கொயர் ஜென் ரியல் எஸ்டேட்டில் மூன்று நாட்களில் 200 கோடி மனைகளின் வர்த்தகம் நடைபெற்று சாதனை படைத்துள்ளது.

மீனாட்சிசுந்தரம்

**

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles