யூ டியூப்பில் பிரபலமான விஜே சித்து ஹீரோவாகப்போகிறார். வேல்ஸ் நிறுவனம் அந்த படத்தை தயாரிக்க உள்ளது என சில வாரங்களாக பேச்சு வந்தது. இன்று அந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதை தங்கள் ஸ்டைலில் ஒரு காமெடி பிரமோ வீடியோவாக வெளியிட்டுள்ளது சித்து டீம். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வைத்தே அந்த வீடியோவை அழகாக எடுத்துள்ளது கூடுதல் சிறப்பு.
படத்தின் தலைப்பு டயங்கரம். இந்த படத்தை சித்துவே இயக்குகிறார். மற்ற நடிகர் நடிகைகள் விவரம் விரைவில் வெளியாக உள்ளது. டயங்கரம் படத்தில் குட்டி டிராகனாக நடித்த ஹர்சத்கான் இருக்கிறாரா? டிராகன் படத்தில் தனது நடிப்பால் கலக்கியவர், சித்து டீமில் இருப்பதால், படத்திலும் இருக்கிறாரா? ஹீரோயின் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. டயங்கரம் பட பிரமோவில் ஹர்சத் இருப்பதால் படத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. சித்துவும் டிராகன் படத்தில் நடித்து இ ருப்பதால், அதில் இருந்த சிலர் இதில் நடிக்கலாம். குறிப்பாக, ஹீரோயின் கயாடுலோஹர் கவுரவ வேடத்தில் வரலாம் என்றும் தகவல். தனக்கே உரிய ஸ்டைலில் காமெடி படமாக டயங்கரத்தை சித்து இயக்கி, நடிக்கப்போகிறாராம்.
**மீனாட்சி சுந்தரம்

