2.4 C
New York
Sunday, December 21, 2025

Buy now

இவரை என் வாழ்க்கையில் கொடுத்த கடவுளுக்கு நன்றி..!!40வது திருமண நாளில் நெகிழ்ந்த பூர்ணிமா பாக்யராஜ்..!!!

தமிழ் சினிமாவில் நடிகராகவும்,இயக்குனராகவும் எழுத்தாளராகவும் வலம் வருபவர் தான் பாக்யராஜ். இவர் தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்.

பாக்யராஜ் அவரே தயாரித்து நடித்த படமான முந்தானை முடிச்சு படத்தில் நடித்த வாத்தியார் கதாபாத்திரம் இன்றும் ரசிகர்களை ஈர்த்து வருகின்றது. இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர் பாக்யராஜ் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார்.

பாக்யராஜ் 1980 மற்றும் 1984லில் பிரபல நடிகையாக வலம் வந்த பூர்ணிமாவுடன் டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற படத்தில்நடித்திருந்தார் .இந்த படத்திற்கு பிறகு பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பாக்யராஜ் பூர்ணிமா இருவர்க்கும் சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் உள்ளார்கள். இயக்குனரான பாக்யராஜ் மகள் சரண்யாவை வைத்து 2006ஆம் ஆண்டு பாரிஜாதம் என்ற படத்தை இயற்றினார்.

அதே போல் மகன் சாந்தனு பாக்யராஜை வைத்து சித்து+2 என்ற படத்தை இயற்றினார். பாக்யராஜ் அவர்களின் மகனும் நடிகருமான சாந்தனு தற்போது ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகராக வாழ்க்கையை தொடங்கிய பாக்யராஜி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியோடு வாழ்ந்து தற்போது 40வது திருமணநாளை கொண்டாடியுள்ளார்.

அப்பா அம்மாவின் திருமண நாளிற்கு ரூபி ஜூபிலியை ஒன்றாகக் கடந்துவிட்டார்கள் என்று சாந்தனு பாக்யராஜ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.

மேலும் பூர்ணிமா அவர்கள் “நான் வணங்கும், போற்றும், மதிக்கும் மனிதருடன் 40 வருடங்கள் கழித்தேன். அவரை என் வாழ்க்கையில் கொண்டு வந்த கடவுளுக்கு நன்றி” என்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கணவரான பாக்யராஜ் அவர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் திருமணநாளிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். மேலும் பூர்ணிமா பாக்யராஜ் அவர்களின் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles