11.2 C
New York
Sunday, April 26, 2026

Buy now

கமாண்டோவின் லவ் ஸ்டோரி விமர்சனம்

கமாண்டோவின் லவ் ஸ்டோரி விமர்சனம்
3.5/5

இது காதல் கதை மட்டுமல்ல.. கமாண்டோவின் தியாக கதையும் கூட

* வீர அன்பரசு இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி உள்ள படம் கமாண்டோவின் லவ் ஸ்டோரி. தலைப்பிலேயே கதை இருக்கிறது. ஆனால் வழக்கமான காதல் கதையாக இல்லாமல், சற்றே மாறுபட்ட காதலை, தேசப்பற்று, ராணுவத்தின் பெருமை, தியாகம் கலந்து சொல்லியிருக்கிறார்கள்

* கமாண்டோவாக வருபவர் வீர அன்பரசு. நாட்டின் மீதும், தனது வேலை மீதும் மரியாதையாக இருக்கிறார். ஒரு பஸ் பயணத்தில் அவருடன் வரும் டாக்டர் படிப்பு ஆராய்ச்சி மாணவி ஏஞ்சலை காதலிக்கிறார். அதேபோல், அவரின் குணத்தை பார்த்து ஏஞ்சலும் காதலிக்கிறார். இருவரும் காதலை சொல்ல நினைக்கும் நேரத்தில், மந்திரி மகளை ஒரு கும்பல் கடத்துகிறது.அவரை மீட்க தனது குழுவுடன் வனப்பகுதிக்கு செல்கிறார் கமாண்டோ வீர அன்பரசு. அங்கே என்ன நடக்கிறது. தனது காதல் விருப்பப்படி எப்படி தாய் ஆகிறார் ஹீரோயின் என்பது கதைக்கரு

* கதைநாயகனாக நடித்த வீரஅன்பரசு, காதல் காட்சிகளில், ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகளில், சண்டைக்காட்சிகளில் முத்திரை பதித்து இருக்கிறார். பாடல்காட்சியில் ஓகே ரகம். அவரி்ன் கேரக்டர், வசனங்கள் ராணுவத்தை பெருமைப்படுத்துகிறது.ராணுவ வீரர்களின் வாழ்க்கை, குடும்பம், தியாகம் ஆகியவற்றை தெளிவாக காண்பிக்கிறது

* ஹீரோயினாக வுரும் ஏஞ்சல் பார்க்க அழகாக இருக்கிறார். நடிப்பும் அப்படியே. காதலன் ஆசைக்காக அவர் எடுக்கும் முடிவு. தான் தாய் ஆக அவர் எடுக்கும் முயற்சி. அவரின் காதல் கதை உண்மையிலே வித்தியாசமானது. ராணுவ பின்னணியில் இப்படிப்பட்ட காதல் கதையை யாரும் சொன்னது இல்லை

* ஹீரோ அப்பாவாக மறைந்த சூப்பர்குட்சுப்ரமணியும், அம்மாவாக வாழை ஜானகியும் நடித்து இருக்கிறார்கள். ராணுவ அதிகாரியாக பப்லு, பாய்ஸ்ராஜன் வருகிறார்கள். இயக்குனர் பேரரசு அவராகவே வருகிறார். இவர்கள் கேரக்டர் மனதில் நிற்கிறது

* தனது அப்பாவின் வாழ்க்கையை, தியாகத்தை மகன் குறும்படமாக எடுப்பதில் இருந்து படம் தொடங்குகிறது. அவர் மகனாக நடித்த ஆகாஷ், அவர் காதலி கேரக்டர், அவர்கள் சீனும் சிறப்பு. கடைசியில் அப்பா மாதிரியே மகனும் நாட்டுக்காக ராணுவத்தில் சேரும் இடம் கைதட்டல்

* அப்பா சம்பந்தப்பட்ட காதல் ஒருவகை என்றால், மகன் சம்பந்தப்பட்ட காதல் இன்னொரு வகை. இரண்டுமே ரசிக்கும்படி இருக்கிறது. இரண்டு காதல்களையும் இணைந்து திரைக்கதை பண்ணியிருக்கிறார்கள்

* மறைந்த ரோபோ சங்கரும் ஒரு ராணுவ வீரராக வருகிறார். அவர் காமெடி ஓகே. மதுமிதா ராணுவ வீரர் மனைவியாக நடித்துள்ளார். அவர் தேசிய கொடி ஏற்றும் இடம் டச்சிங்

* இளையராஜா அண்ணன் பாவலர் மகனும், மறைந்தவிட்டவருமான சிவராமன் பாடல்கள் அருமை. பின்னணி இசையை கார்த்திக்ராஜா அமைத்து இருக்கிறார். பனிமலை சூழ்ந்த இடத்தில் வரும் பாடல் காட்சி, கவர்ச்சி பாடல் ஓகே ரகம்

* வழக்கமான காதல் படமாக இல்லாமல், ராணுவத்தை பெருமைப்படுத்துவதும், ஒரு காதலை வித்தியாசமாக சொன்னதும், நாட்டுப்பற்றை நிலைநிறுத்தியதும் படத்தின் பிளஸ். அந்த வகையில் இயக்குனராக, நடிகராக பாராட்டு பெறுகிறார் வீரஅன்பரசு

மீனாட்சிசுந்தரம்

Related Articles

Latest Articles