
எந்த நடிகரை, எந்த அரசியல்வாதியை கலாய்க்கிறது டிஎன்2026?
**************************************************************
* கண்ணன்ரவிகுரூப்ஸ் தயாரிப்பில், தம்பி ராமையா கதை, வசனத்தில், உமாபதி.எஸ்.ராமையா இயக்கத்தில் நட்டி, தம்பிராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ரெடின்கிங்ஸ்லீ, ஷிரித்தாராவ்,
சாந்தினி தமிழரசன் உட்பட பலர் நடிப்பில் வெளி வந்துள்ள படம் டிஎன்2026.
* சரியாக தமிழ் பேச வராத குல்கந்த்குமார்(நட்டி) எப்படியோ சினிமாவில் ஹீரோவாகி விடுகிறார். எம்ஜிஆர் ரசிகரான ‘பண்ணையார்’ தம்பிராமையா அவர் மீது பாசம் காட்டி பெரிய ஸ்டார் ஆக்கிவிடுகிறார். நட்டியின் காட்பாதராக இருந்து அடுத்தடுத்த நிலைக்கு வளர்த்துவிடுகிறார். ஒரு கட்டத்தில் அரசியலில் என்ட்ரி ஆகி, முதல்வர் ஆக ஆசைப்படுகிறார் நட்டி? அது நடந்ததா?
என்பது டிஎன்2026 கதை
* 1980களில் கதை தொடங்கிறது.பொள்ளாச்சி படப்பிடிப்புக்கு வரும் ஹீரோ குல்கந்த் குமாருக்கு அவமானமே பரிசாக கிடைக்கிறது. படத்தின் இயக்குனர், ஹீரோயின், பு ரடக் ஷன் மானேஜர் உட்பட பலரும் அவரை திட்ட, அந்த ஊர் பண்ணையாரான தம்பிராமையா மட்டும் பாசம் காண்பிக்கிறார். அவர் தயவால் ஆக் ஷன் ஹீரோ, கோல்டன் ஸ்டார் என முன்னேறுகிறார் நட்டி. இடைவேளைவரை இப்படி கதை கலகலவென செல்கிறது.
* இடைவேளைக்குபின் குல்கந்த்குமாரின் அரசியல் ஆசை நிறைவேறியதா? அதற்காக அவர் என்ன செய்கிறார். அதில் தம்பிராமையாவின் பங்கு என்ன என்றரீதியில் அதிரடிக்கு கதை மாறுகிறது. யார் எதிர்பாராத கிளைமாக்சை கொடுத்து இருக்கிறார் இயக்குனர்
* நட்டியின் சினிமா வாழ்க்கையில் இது முக்கியமான படம். ஆரம்பம் முதல் கடைசிவரை நடிப்பில் மாயஜாலம் காண்பிக்கிறார். ஆரம்பத்தில் வட இந்தியர்கள் போல தமிழை தப்பு, தப்பாக பேசிக்கொண்டு அவர் அடிக்கிற லுாட்டி, அந்த சினிமா சம்பந்தப்பட்ட சீன்கள், டான்ஸ் அனைத்தும் ரசிக்கவைக்கிறது
* பரதநாட்டிய டான்சர் ஷிரித்தா மீது அவருக்கு காதல் வர, அவர் வீட்டில் போய் பேசி திருமணம் செய்து வைக்கிறார் தம்பிராமையா. சில ஆண்டுகள் கழித்து யாஷிகா ஆனந்த் மற்ற ஹீரோயின் மீது நட்டிக்கு மோகம் வர, என்ன நடக்கிறது என்பது விறுவிறுப்பான சீன்கள். அந்த காட்சிகளில் ஷிரித்தா, அவர் அம்மாவாக வரும் விஜி சந்திரசேகர் நடிப்பும்,நட்டியின் கேரக்டர் மாறுவதும் அருமை
* ஆளுங்கட்சியுடன் மோதல் போக்கை கடைபிடிக்கும் நட்டி, தனது ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றுகிறார். அப்போதே பலருக்கு கோபம் வர, அதற்கான பலனை அனுபவிக்கிறார். அடுத்து கட்சி தொடங்கி என்னென்ன கூத்து நடக்கிறது என்பது மீதிக்கதை
* நடிகராக கலக்கிய நட்டி, அரசியல் வாதி கேரக்டரில் அடக்கி வாசிக்கிறார். நட்டியின் கேரக்டரில் பல முன்னணி நடிகர்கள், அரசியல்வாதிகளை பார்க்கலாம். அந்த அளவுக்கு சீன்கள், வசனங்களை படத்தை ஸ்பீடு ஆக்கியிருக்கிறார் இயக்குனர்.
* அப்பாவி பண்ணையாராக வரும் தம்பிராமையாவின் காமெடி கலந்த நடிப்பும், அவர் கேரக்டர் மாறுவதும் படத்துக்கு பிளஸ். நட்டி, தம்பிராமையா சீன்கள் படத்தை இன்னும் ரசிக்க வைக்கின்றன. அவர்களுக்கு இடையேயான உறவு மாறுவது. மரியாதையை நட்டி எதிர்பார்க்கும் இடங்கள் டச்சிங். நட்டியின் அரசியல் வாழ்க்கையில் தம்பிராமையா அடிக்கும் காமெடி சூப்பர். அவர் கேரக்டரும் சிலரை நினைவுப்படுத்துகிறது
* எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு அரசியல்வாதிகளாக வருகிறார்கள். ரெடின்கிங்ஸ்லீ ரசிகர் மன்ற தலைவராக மாறி, வேறு மாதிரி ஆகிறார். எல்லா கேரக்டரிலும் ஒரு வித கிண்டல், அரசியல் சாயம் இருக்கிறது. தலைவாசல் விஜய்க்கு அட்வைசர் வேடம்
* பல வசனங்கள், பல சீன்களில் பல கிண்டல், பல உண்மை சம்பவங்கள் நிறைந்து இருக்கிறது.அதனால் அவ்வப்போது கைதட்டல், சிரிப்பு வருகிறது. சில சீன்களை மீண்டும் பார்த்தால் தம்பிராமையாவின் நக்கல், கிண்டல், கேலி, அரசியல் சட்டயர் நன்கு தெரிகிறது. ரஜினி, கமல், விஜய், சீமான், கூவத்துார் சம்பவம், பொதுக்குழு, பிரஸ்மீட் என அனைத்திலும் நமக்கு தெரிந்த பல விஷயங்கள் பளீச்சிடுகிறது. அது படத்தை ரசிக்க வைக்கிறது. இப்படிப்பட்ட படங்கள் தமிழில் வந்து வெகுநாளாச்சு.
* அரசியல் சட்டையர் இருந்தாலும் எந்த சீனிலும், எந்த வசனத்திலும் யாரையும் படக்குழு எந்த நடிகரையும், எந்த கட்சியையும், எந்த தனிப்பட்ட மனிதரையும்
காயப்படுத்தவிலலை. ரசித்து, சிரித்துமகிழுங்கள் என்ற ரீதியில் படம் இருக்கிறது. கிளைமாக்சில் இன்னும் கொஞ்சம் மாற்றம் செய்திருந்திருக்கலாம்.
* குறிப்பாக, இடைவேளைக்குபின் வரும் அரசியல் காட்சிகளில், பல நிகழ்கால சம்பவங்கள் தெரிகின்றன. பல அரசியல்வாதிகள், நடிகர்களாக இருந்து அரசியலுக்கு வந்தவர்களின் சாயல் தெரிகிறது. அதெல்லாம் படத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்கின்றன. ஆனாலும், முதற்பாதியில் இருக்கும் வேகம், கலகலப்பு, பிற்பாதியில் கொஞ்சம் குறைவு
* பி.ஜி.முத்தையா கேமரா, தர்புகா சிவா இசை, தம்பிராமையா கதை, வசனம், உமாபதி நடிப்பு, கண்ணன் ரவி குழுமத்தின் பிரமாண்டம் இணைந்து டிஎன்2026 படத்தை வெற்றி படமாக்குகிறது. தேர்தல் காலகட்டத்தில் இந்த படம் வருவது இன்னும் ஸ்பெஷல்

மீனாட்சிசுந்தரம்

